Here we had shared a full advice article for how to get full marks in public examination of SSLC and Higher secondary (10th & 12th Standard) , we had shared few steps to that should be followed by you to get good marks in public examination.
தேர்வில் முழு மதிப்பெண் எடுப்பது எப்படி ?
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமென்றால் நீங்கள் அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண்களை எடுக்க வேண்டும் . ஒவ்வொரு பாடங்களிலும் நூறு மதிப்பெண்களை எடுப்பது எப்படி என்பதைப் பற்றிய கட்டுரைகள் ஏற்கனவே நமது வலைதளத்தில் உள்ளது அதற்கான இணைப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் நீங்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க பொதுவாக செய்ய வேண்டிய ஒரு சில முக்கியமான விஷயங்களைப் பற்றி காண்போம்.
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?
- அனைத்து பாடங்களில் உள்ள புத்தக வினாக்களை முழுமையாக படிக்கவேண்டும் , அப்படி படிக்க முடியவில்லை என்றால் அந்த பாடத்தில் உள்ள முக்கிய வினாக்கள் எவை என்பதை தங்களுடைய ஆசிரியரிடம் கேட்டுக்கொண்டு அல்லது இணையதளத்தில் பார்த்து படித்துக் கொள்ளலாம். மேலும் ஏற்கெனவே நடைபெற்ற பல அரசு வினாத்தாள்களை எடுத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களையும் பயிற்சி செய்து கொள்ளவும்.
- தேர்வு நெருங்கும் பொழுது புதியதாக எந்த கேள்வியும் படிக்காமல் இருக்க வேண்டும். ஏனென்றால் , தேர்வு நெருங்கும் போது உங்களுக்கு பதட்டம் ஏற்படும். அந்த நேரத்தில் நீங்கள் புதிய வினாக்களை படித்தால் உங்களுக்கு நீங்கள் ஏற்கனவே படித்த பழைய வினாக்களும் மறந்துவிடும்.
- எனவே தேர்வின் பொழுது திருப்புதல் மட்டுமே செய்ய வேண்டும். திருப்புதல் என்றால் ஏற்கனவே நீங்கள் படித்த அனைத்தையும் ஒருமுறை பார்த்து படிக்க வேண்டும். ஏனென்றால் , நீங்கள் பார்த்து படிக்கும் பொழுது அந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள எழுத்துக்கள் உங்களுக்கு, நீங்கள் தேர்வு எழுதும் போது உங்கள் கண் முன் வருவது போல் இருக்கும். ஒரு சிலர் தாங்கள் படிக்கும் பொழுது தாங்கள் படித்தது தங்களுக்கு மனப்பாடமாகத் தெரியும் என்று நினைத்துக் கொண்டு வேறு எங்கேயும் வேடிக்கை பார்த்துக்கொண்டே அதை மறுபடியும் படிப்பார்கள். இப்படி செய்பவர்கள் அந்த வினாக்களை மறந்துவிடுவார்கள். நீங்கள் எப்போது திருப்புதல்(Revision) செய்தாலும் உங்கள் புத்தகத்தை பார்த்து படிக்கவும். எனக்கு பார்க்காமல் தெரியும் என்பதற்காக வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டு படிக்கக்கூடாது.
- மேலும் , எளிமையாக ஒரு மதிப்பெண்களை வழங்கும் ஒரு மதிப்பெண் வினாக்கள் (பத்தாம் வகுப்பு மாணவர்களாக இருந்தால் வரைபடங்கள் , காலக்கோடுகள்) வினாக்களை தெளிவாக படிக்கவும் ஏற்கனவே படித்திருந்தாலும் தேர்வுக்கு முன்னர் ஒரு மதிப்பெண் வினாக்களை மறுபடியும் ஒருமுறை திருப்புதல் (Revision) செய்யவும். ஏனென்றால் முழு மதிப்பெண்கள் எடுக்கக் கூடிய மாணவர்கள் பெரும்பாலும் தங்களுடைய மதிப்பெண்களை இழப்பது ஒரு மதிப்பெண் வினாக்களில் மட்டுமே.
- இறுதியாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று மட்டுமே. நீங்கள் எவ்வளவுதான் புத்தகத்தில் உள்ள அனைத்தையும் படித்து இருந்தாலும் , நீங்கள் உங்களுடைய விடைகளை விடைத்தாளில் எழுதும் முறையைக் கொண்டே உங்களுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் பெரும்பாலும் எதிர்பார்ப்பது மாணவர்களின் கையெழுத்து நன்றாக இருக்க வேண்டும் , பேப்பர் பிரசெண்டேஷன் (Paper Presentation) நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே. ஒருவர் எழுதிய விடைத்தாளில் அனைத்து விடைகளும் சரியாக இருந்தாலும் அந்த விடைத்தாளில் உள்ள கையெழுத்து நன்றாக இல்லை என்றால் அந்த விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் முழு மதிப்பெண்களை வழங்குவதற்கு தயங்குவார்கள். இதுவே, அந்த விடைத்தாளில் கையெழுத்து நன்றாக இருந்தால் முழு மதிப்பெண்களை வழங்குவார்கள்.
மேலே கூறப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் நீங்கள் பின்பற்றினால் கட்டாயம் உங்களால் உங்களுடைய பொதுத்தேர்வில் முழு மதிப்பெண்களை எடுக்க முடியும். மேலும் இதுபோன்ற பல சுவாரசியமான மற்றும் உணர்ச்சியூட்டும் கட்டுரைகளுக்கு நமது டெலிகிராம் குழுவில் (Click here to Join in our Telegram Channel) இணையுங்கள். மேலே கூறப்பட்டுள்ள கட்டுரை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும்.
Iam try this all points thanks for your guidelines
Thanks
Sir ungaloda andha tamil key answer. Venum
Helo mam please commerce and computer application group ku questions paper anupunga tamil medium dhu please