12th Physics Revision test Question Paper January 2022

12th Physics Revision test Question Paper January 2022

Our school education department had already released a revision test syllabus for november and december month 2021. As per that syllabus we had created the 12th Physics november and december month revision test question paper . This revision test question paper is created in the pattern of public question paper which is the maximum marks of tamil is 90 Marks covering all one marks in public question pattern . we had given the Free pdf download link for 12th Physics revision test model question paper for november and december month of 2021 was given in the bottom of this post.

12th Physics Revision test Question Paper 2022 January

November and December month based revision test model question paper 2021-22 for 12th Physics . 12th Physics standard december month revision test question paper 2021-22

பரவல் காரணமாக செப்டம்பர் 1ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு அவர்களுடைய கடந்த வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படை மற்றும் சூத்திரங்களை கற்பிக்கும் வகையில் புத்தாக்க பயிற்சி என்ற புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டு அதற்கான பாடப் புத்தகங்களையும் வெளியிட்டது. அந்த பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு பள்ளி திறந்தவுடன் 45 நாட்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்ற ஆனை பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டது.

எனவே மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட பின் இரண்டு மாதங்கள் புத்தாக்க பயிற்சி புத்தகங்கள் கற்பிக்கப்பட்ட நிலையில் , நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த பாடத் திட்டங்களில் இருந்து திருப்புதல் தேர்வு ஜனவரி மாத முதல் வாரத்திலோ அல்லது டிசம்பர் இறுதியில் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது.

அதன் பெயரில் தமிழக அரசு வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் தயாரித்து கீழே வழங்கியுள்ளோம். இந்த வினாத்தாள் வடிவமைப்பானது ஏற்கனவே நடைபெற்ற 2 பொதுத்தேர்வு வினாத்தாள் அடிப்படையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஏற்கனவே தமிழ் பாடத்திற்கான வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்விற்கான ஆங்கில மாதிரி வினாத்தாள் இனை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற ஆங்கில எழுத்தில் தொடவும்.


12th Revision Test Question Papers January 2022

  • 12th Tamil Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th English Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Mathematics Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Physics Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Chemistry Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Biology Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Computer Science Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Commerce Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Economics Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Accountancy Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Computer Application Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)

12th English Revision test Question Paper January 2022

12th English Revision Test Question Paper January 2022

Our school education department had already released a revision test syllabus for november and december month 2021. As per that syllabus we had created the 12th english november and december month revision test question paper . This revision test question paper is created in the pattern of public question paper which is the maximum marks of tamil is 90 Marks covering all one marks in public question pattern . we had given the Free pdf download link for 12th english revision test model question paper for november and december month of 2021 was given in the bottom of this post.

12th English Revision test Question Paper 2022 January

November and December month based revision test model question paper 2021-22 for 12th english . 12th English standard december month revision test question paper 2021-22

பரவல் காரணமாக செப்டம்பர் 1ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு அவர்களுடைய கடந்த வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படை மற்றும் சூத்திரங்களை கற்பிக்கும் வகையில் புத்தாக்க பயிற்சி என்ற புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டு அதற்கான பாடப் புத்தகங்களையும் வெளியிட்டது. அந்த பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு பள்ளி திறந்தவுடன் 45 நாட்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்ற ஆனை பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டது.

எனவே மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட பின் இரண்டு மாதங்கள் புத்தாக்க பயிற்சி புத்தகங்கள் கற்பிக்கப்பட்ட நிலையில் , நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த பாடத் திட்டங்களில் இருந்து திருப்புதல் தேர்வு ஜனவரி மாத முதல் வாரத்திலோ அல்லது டிசம்பர் இறுதியில் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது.

அதன் பெயரில் தமிழக அரசு வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திற்கான திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் தயாரித்து கீழே வழங்கியுள்ளோம். இந்த வினாத்தாள் வடிவமைப்பானது ஏற்கனவே நடைபெற்ற 2 பொதுத்தேர்வு வினாத்தாள் அடிப்படையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஏற்கனவே தமிழ் பாடத்திற்கான வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்விற்கான ஆங்கில மாதிரி வினாத்தாள் இனை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற ஆங்கில எழுத்தில் தொடவும்.


12th Revision Test Question Papers January 2022

  • 12th Tamil Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th English Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Mathematics Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Physics Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Chemistry Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Biology Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Computer Science Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Commerce Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Economics Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Accountancy Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Computer Application Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)

12th Tamil Revision test Question Paper January 2022

12th Standard Tamil Revision Test Question Paper January 2022

Our school education department had already released a revision test syllabus for november and december month 2021. As per that syllabus we had created the 12th tamil november and december month revision test question paper . This revision test question paper is created in the pattern of public question paper which is the maximum marks of tamil is 90 Marks . we had given the Free pdf download link for 12th tamil revision test model question paper for november and december month of 2021 was given in the bottom of this post.


12th Tamil Revision test Question Paper 2021 January 2022

கொரோனா பரவல் காரணமாக பல மாத விடுமுறைகளுக்குப் பிறகு செப்டம்பர் 1ஆம் தேதி தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் , மாணவர்களின் கல்வி பல மாதங்களாக விடுபட்ட இருந்த காரணத்தினால் தமிழக பள்ளிக்கல்வித்துறை புத்தாக்க பயிற்சி என்ற புதிய திட்டத்தை உருவாக்கி புத்தாக்க பயிற்சி புத்தகத்தினை மாணவர்களுக்கு 45 நாட்களுக்கு கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அக்டோபர் மாத இறுதிவரை மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி புத்தகங்கள் கற்பிக்கப்பட்ட நிலையில், அவர்களுடைய பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்கள் எடுக்கப்படாமல் இருந்தது.

எனவே பள்ளிக்கல்வித்துறை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான பாடத்திட்டத்தினை வெளியிட்டு, இந்த பாடத்திட்டத்தில் இருந்து டிசம்பர் மாத இறுதியிலோ அல்லது ஜனவரி மாத முதல் வாரத்திலோ திருப்புதல் தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று தெரிவித்திருந்தது. எனவே நமது வலைதளத்தில் அந்த பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான நவம்பர் மற்றும் டிசம்பர் மாத திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் தயாரிக்கபட்டு கீழே வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவ செல்வங்கள் பதிவிறக்கம் செய்து பயன் பெறவும் மற்ற மாணவர்களுக்கும் நமது வலை தளத்தை பகிரவும். மேலும் வரும் நாட்களில் அனைத்து பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் தினம் தினம் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பிடிஎப்-ஐ பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் (Download) என்பதை அழுத்தவும்.

12th Tamil Model First Revision test 1Marks Answer key January 2022

  1. அ) காவியதர்சம்
  2. அ) பரலி சு நெல்லையப்பர்
  3. ஆ) தொல்காப்பியம்
  4. அ) ஐயப்ப மாதவன்
  5. ஆ) ஐயப்ப மாதவன்
  6. அ)பொருட் குறிப்பு
  7. அ)என்.சத்தியமூர்த்தி
  8. அ) திருக்குறள்
  9. ஆ) இராமவதாரம்
  10. அ) பூ.மாணிக்கவாசகர்
  11. ஆ) பூ மாணிக்கவாசகர்
  12. இ)மழைத்துளிகள்
  13. இ) வேலூர்
  14. அ) பதினெண்கீழ்க்கணக்கு

12th First Revision Test Question Papers January 2022

  • 12th Tamil Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th English Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Mathematics Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Physics Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Chemistry Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Biology Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Computer Science Revision test Question Paper January 2022 – Click Here
  • 12th Commerce Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Economics Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Accountancy Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)
  • 12th Computer Application Revision test Question Paper January 2022 – Click Here (Coming Soon)

How to get Full Marks in Public Exam 100/100

Here we had shared a full advice article for how to get full marks in public examination of SSLC and Higher secondary (10th & 12th Standard) , we had shared few steps to that should be followed by you to get good marks in public examination.

தேர்வில் முழு மதிப்பெண் எடுப்பது எப்படி ?

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமென்றால் நீங்கள் அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண்களை எடுக்க வேண்டும் . ஒவ்வொரு பாடங்களிலும் நூறு மதிப்பெண்களை எடுப்பது எப்படி என்பதைப் பற்றிய கட்டுரைகள் ஏற்கனவே நமது வலைதளத்தில் உள்ளது அதற்கான இணைப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் நீங்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க பொதுவாக செய்ய வேண்டிய ஒரு சில முக்கியமான விஷயங்களைப் பற்றி காண்போம்.

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?

  1. அனைத்து பாடங்களில் உள்ள புத்தக வினாக்களை முழுமையாக படிக்கவேண்டும் , அப்படி படிக்க முடியவில்லை என்றால் அந்த பாடத்தில் உள்ள முக்கிய வினாக்கள் எவை என்பதை தங்களுடைய ஆசிரியரிடம் கேட்டுக்கொண்டு அல்லது இணையதளத்தில் பார்த்து படித்துக் கொள்ளலாம். மேலும் ஏற்கெனவே நடைபெற்ற பல அரசு வினாத்தாள்களை எடுத்து அதில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களையும் பயிற்சி செய்து கொள்ளவும்.
  2. தேர்வு நெருங்கும் பொழுது புதியதாக எந்த கேள்வியும் படிக்காமல் இருக்க வேண்டும். ஏனென்றால் , தேர்வு நெருங்கும் போது உங்களுக்கு பதட்டம் ஏற்படும். அந்த நேரத்தில் நீங்கள் புதிய வினாக்களை படித்தால் உங்களுக்கு நீங்கள் ஏற்கனவே படித்த பழைய வினாக்களும் மறந்துவிடும்.
  3. எனவே தேர்வின் பொழுது திருப்புதல் மட்டுமே செய்ய வேண்டும். திருப்புதல் என்றால் ஏற்கனவே நீங்கள் படித்த அனைத்தையும் ஒருமுறை பார்த்து படிக்க வேண்டும். ஏனென்றால் , நீங்கள் பார்த்து படிக்கும் பொழுது அந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள எழுத்துக்கள் உங்களுக்கு, நீங்கள் தேர்வு எழுதும் போது உங்கள் கண் முன் வருவது போல் இருக்கும். ஒரு சிலர் தாங்கள் படிக்கும் பொழுது தாங்கள் படித்தது தங்களுக்கு மனப்பாடமாகத் தெரியும் என்று நினைத்துக் கொண்டு வேறு எங்கேயும் வேடிக்கை பார்த்துக்கொண்டே அதை மறுபடியும் படிப்பார்கள். இப்படி செய்பவர்கள் அந்த வினாக்களை மறந்துவிடுவார்கள். நீங்கள் எப்போது திருப்புதல்(Revision) செய்தாலும் உங்கள் புத்தகத்தை பார்த்து படிக்கவும். எனக்கு பார்க்காமல் தெரியும் என்பதற்காக வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டு படிக்கக்கூடாது.
  4. மேலும் , எளிமையாக ஒரு மதிப்பெண்களை வழங்கும் ஒரு மதிப்பெண் வினாக்கள் (பத்தாம் வகுப்பு மாணவர்களாக இருந்தால் வரைபடங்கள் , காலக்கோடுகள்) வினாக்களை தெளிவாக படிக்கவும் ஏற்கனவே படித்திருந்தாலும் தேர்வுக்கு முன்னர் ஒரு மதிப்பெண் வினாக்களை மறுபடியும் ஒருமுறை திருப்புதல் (Revision) செய்யவும். ஏனென்றால் முழு மதிப்பெண்கள் எடுக்கக் கூடிய மாணவர்கள் பெரும்பாலும் தங்களுடைய மதிப்பெண்களை இழப்பது ஒரு மதிப்பெண் வினாக்களில் மட்டுமே.
  5. இறுதியாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று மட்டுமே. நீங்கள் எவ்வளவுதான் புத்தகத்தில் உள்ள அனைத்தையும் படித்து இருந்தாலும் , நீங்கள் உங்களுடைய விடைகளை விடைத்தாளில் எழுதும் முறையைக் கொண்டே உங்களுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் பெரும்பாலும் எதிர்பார்ப்பது மாணவர்களின் கையெழுத்து நன்றாக இருக்க வேண்டும் , பேப்பர் பிரசெண்டேஷன் (Paper Presentation) நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே. ஒருவர் எழுதிய விடைத்தாளில் அனைத்து விடைகளும் சரியாக இருந்தாலும் அந்த விடைத்தாளில் உள்ள கையெழுத்து நன்றாக இல்லை என்றால் அந்த விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் முழு மதிப்பெண்களை வழங்குவதற்கு தயங்குவார்கள். இதுவே, அந்த விடைத்தாளில் கையெழுத்து நன்றாக இருந்தால் முழு மதிப்பெண்களை வழங்குவார்கள்.

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் நீங்கள் பின்பற்றினால் கட்டாயம் உங்களால் உங்களுடைய பொதுத்தேர்வில் முழு மதிப்பெண்களை எடுக்க முடியும். மேலும் இதுபோன்ற பல சுவாரசியமான மற்றும் உணர்ச்சியூட்டும் கட்டுரைகளுக்கு நமது டெலிகிராம் குழுவில் (Click here to Join in our Telegram Channel) இணையுங்கள். மேலே கூறப்பட்டுள்ள கட்டுரை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும்.

படித்ததை நினைவில் வைத்துக் கொள்வது எப்படி?

 படித்ததை   மறந்துவிடாமல் இருக்க என்ன செய்யவேண்டும். படித்ததை மறந்துவிடாமல் நினைவில் வைத்துக் கொள்வது எப்படி?

மறக்காமல் படிப்பது எப்படி ?

தற்போதைய சூழ்நிலையில் பல மாணவர்களின் மனதில் ஏற்பட்டுள்ள கேள்வி படித்ததை மறக்காமல் இருப்பது எப்படி ? என்பது மட்டுமே. மாணவர்களிடம் இந்தக் கேள்வி எழுவதற்கான காரணம் என்னவென்றால் தற்போது உள்ள மாணவர்கள் அனைவரும் பாடத்தினை புரிந்து படிக்காமல் மனப்பாடம் செய்வது மட்டுமே.

பாடத்தை புரிந்து படிப்பது எப்படி ?

பள்ளி மாணவர்களாக இருந்தாலும், கல்லூரி மாணவர்களாக இருந்தாலும் அல்லது ஏதேனும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களாக இருந்தாலும் அனைவரும் தாங்கள் பயிலும் பாடத்தினை புரிந்து படித்தால் மட்டுமே தங்களுடைய இலக்கை எட்ட முடியும். ஏனென்றால் இந்த போட்டி நிறைந்த உலகில் நாம் நமது மதிப்பெண்களுக்காக புத்தகத்தில் உள்ள அனைத்தையும் மனப்பாடம் செய்து அதை அப்படியே தேர்வில் எழுதினால் மதிப்பெண்களுக்கு மட்டுமே உதவும்.

தங்களுடைய அறிவை பெருக்கிக் கொள்ள அது உதவாது. ஏனென்றால் தற்போது பல போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாத்தாள்கள் அனைத்தும் பாடத்தினை நன்கு உள்நோக்கி கவனித்தால் மட்டுமே விடை அளிக்கும் படியாக வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் எந்த வினாவினை படித்தாலும் அதன் மையக் கருவை தெளிவாக படித்து உணர வேண்டும்.

மையக்கருவை அறிந்து கொள்வது எப்படி ?

மையக்கருத்து என்பது அந்த பாடம் அல்லது கேள்வியின் விடையை ஒரே வரியில் புரிந்து கொள்வது மட்டுமே. தாங்கள் மையக்கருவை அறியாமலேயே அந்த வினாவிற்கான விடையை முழுமையாக மனப்பாடம் செய்து கொண்டால் தாங்கள் தேர்வு எழுதும்போது ஏதேனும் ஒரு இடத்தில் தடங்கல் ஏற்பட்டால் அதன் பிறகு தங்களால் அந்த விடையினை எழுத முடியாது அதுவே நீங்கள் அந்த வினாவிற்கான மையக்கருவை புரிந்து படித்து இருந்தால் எந்த நேரத்திலும் உங்களுக்கு அந்த வினாவிற்கான மையக்கரு உங்களுக்கு தெரியும் இதை வைத்து தாங்கள் தங்களுடைய சொந்த நடையில் அந்த வினாவிற்கான சரியான விடையை எழுத முடியும் இதையே பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

புரிந்து படிப்பது எப்படி ?

ஒரு வினாவினை புரிந்து படிக்க வேண்டும் என்றால் அந்த வினா எந்த மொழியில் இருந்தாலும் முதலில் அந்த வினாவினை தங்களின் சொந்த தாய்மொழிக்கு மாற்றி அமைக்கவும் பின்னர் அந்த வினாவிற்கான விடையையும் தங்கள் தாய்மொழியிலேயே கற்க வேண்டும். ஏனென்றால் யாராக இருந்தாலும் அவர்களுடைய தாய்மொழியில் ஒன்றைக் கற்றுக் கொண்டால் அதனை எப்போதும் மறக்க மாட்டார்கள். எனவே நீங்கள் எதைப் படித்தாலும் உங்களது தாய் மொழியில் அதனை தெளிவாகப் படித்து உணர வேண்டும் பின்னர் அதனை ஆங்கிலத்திலோ அல்லது அங்கு எழுத வேண்டிய மொழியில் எழுதுவதற்கு அந்த மொழியில் உள்ள இலக்கண இலக்கிய நெறிமுறைகளை நன்கு அறிந்து இருந்தால் உங்களால் உங்களுடைய தாய்மொழியில் கற்ற அல்லது புரிந்துகொண்ட விடையினை ஆங்கிலத்திலோ அல்லது அங்கு எழுதவேண்டிய மொழியிலோ சரளமாக எழுதி மொத்த மதிப்பெண்களையும் பெற முடியும்.

ஒரு வினாவினை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அந்த வினாவினை தங்களுடைய நண்பர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமும் கேட்டு அந்த வினா-விடை உங்கள் தாய்மொழியில் புரிந்துகொள்ளுங்கள். அப்போதும் அந்த வினா தங்களுக்கு புரியவில்லை என்றால் அந்த வினாவிற்கான பாடத்தை ஒரு தனித் தாளில் வரைந்து புரிந்துகொள்ள முயற்சிக்கவும். ஏனென்றால் தாங்கள் எதைக் கற்றாலும் அதை படமாக கற்றால் தங்களுடைய மூளையின் சென்று ஆழமாக பதிந்து கொள்ளும். இதற்காகவே பாடப்புத்தகங்களில் அனைத்து செயல்முறைகள் மற்றும் விடைகளுக்கு அருகில் அந்த செயல் முறை அல்லது விடையில் கூறப்பட்டுள்ள முறையை படமாக போட்டு காண்பித்துள்ளனர்.

படித்ததை மறந்துவிடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்.

படித்ததை மறக்காமல் இருக்க வேண்டுமென்றால் நன்றாக படித்து முடித்தபின் அந்த வினாவினை எழுதிப் பார்க்கவும். ஏனென்றால் ஒரு முறை எழுதிப் பார்ப்பது என்பது பத்து முறை படிப்பதற்கு சமமானது. எனவே எந்த வினாவினை படித்தாலும் அந்த வினாவினை படித்து முடித்தபின் எழுதிப் பார்க்கவும் அதை நீங்களே திருத்துங்கள். அப்பொழுதுதான் நீங்கள் செய்யும் பிழைகளை திருத்திக் கொள்ள உதவும் இந்த வினாவினை மறுபடியும் நீங்கள் உங்கள் தேர்வில் எழுதும் போது அந்தப் பிழை உங்களுக்கு வராமல் இருக்கும்..

மீண்டும் மீண்டும் நாங்கள் இறுதியாக கூறுவது ஒன்று மட்டுமே எந்த வினாவினை படித்தாலும் அதை புரிந்து படித்துக் கொள்ளுங்கள். உங்கள் தாய்மொழியில் படியுங்கள் அதுவே அந்த வினாவினை வாழ்நாள் முழுவதற்கும் ஞாபகம் வைத்துக் கொள்ள உதவும்.

மேலும் இதுபோன்ற பல சுவாரசியமான மற்றும் உணர்ச்சியூட்டும் கட்டுரைகளுக்கு நமது டெலிகிராம் குழுவில் (Click here to Join in our Telegram Channel) இணையுங்கள். மேலே கூறப்பட்டுள்ள கட்டுரை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும்.

Schools & Colleges in Tamil Nadu has Declared holiday due to Rain

From november month heavy rain in northern part of india like Tamilnadu , Kerala , Andhara Pradesh and Karnataka . Some districts of Tamil nadu has declared holiday for schools and Colleges on Today (30.11.2021) due to the heavy rain. Holiday declared districts are listed below. This web page is Updated 5 Minutes once. so If your District is not in this list , Kindly Visit this webpage after 5 to 10 minutes.

School and College Holiday Declared districts due to rain

Schools & CollegesSchools Only
TiruvallurChengalpattu
Thoothukudi Kanchipuram
MaduraiTirunelveli
Sivagangai Ramanathapuram
Cuddalore
Dindigul
Nilgiris
Theni

கனமழை காரணமாக இன்று (30.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

அண்மைக்காலமாக தமிழகம் , ஆந்திரா மற்றும் பல மாநிலங்களில் தொடரும் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக தொடர் கனமழை பெய்து வரும் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக , இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்டங்களின் பட்டியலை கீழே வழங்கியுள்ளோம். இந்த தளமானது 5 நிமிடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களின் பட்டியலும் கீழே வழங்கப்பட்டுள்ளது. தங்கள் மாவட்டத்திற்கு இன்னும் விடுமுறை வழங்கவில்லை என்றால் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் கழித்து வந்து பார்க்கவும்.

பள்ளி , கல்லூரிகளுக்குபள்ளிகளுக்கு மட்டும்
தூத்துக்குடிகாஞ்சிபுரம்,
திருவள்ளூர்செங்கல்பட்டு
மதுரை திருநெல்வேலி
சிவகங்கை ராமநாதபுரம்
கடலூர்
தேனி
நீலகிரி
திண்டுக்கல்

ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏரி , குளங்கள் , குட்டைகள் மற்றும் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் செல்கின்றன. ஒருசில மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி உள்ளதால் அவை என் நேரத்திலும் உடைத்துக்கொண்டு வெள்ளம் வரலாம் என்ற காரணத்தை கருத்தில் கொண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்தின் பேரில் ஆன்லைன் வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாட்களை மாணவர்கள் பயனுள்ள வகையில் தாங்கள் ஏற்கனவே படிக்காமல் இருக்கக்கூடிய தலைப்புகள் மற்றும் பாடங்களைப் படிப்பதற்கு இந்த நேரங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கனவே குருணை பரவல் காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட நிலையில் பல மாணவர்களின் மனதில் தற்போது எழுந்துள்ள கேள்வி என்னவென்றால் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நவம்பர் மாதத்தில் மட்டும் 20 நாட்களுக்கும் மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளதால் , மறுபடியும் ஏதேனும் குறைக்கப்படுமா ? 

     இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மழைக்கால விடுமுறைக்காக பாடங்களை குறைக்க முடியாது என்றும் , இந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையாக பள்ளிகள் திறக்கப்பட்ட பின் சிறப்பு வகுப்புகள் வைத்த அந்த பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் . இது போன்ற மழைக்கால விடுமுறைகள் , கல்வி தகவல்கள் போன்ற பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள நமது டெலிகிராம் குழுவில் இணைக்கவும். இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தங்களுக்கு தெரிந்த மாணவச் செல்வங்கள் மட்டும் ஆசிரிய பெருமக்களுக்கு பகிரவும்.