Tamil Nadu Government Holiday List 2023, The Government of Tamil Nadu had officially released the Government Holidays for 2023.

2023 ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டில் 24 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை தேதிகள் அட்டவனை

  • 1 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
  • 15 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல்
  • 16 ஜனவரி திங்கட்கிழமை திருவள்ளுவர் தினம்
  • 17 ஜனவரி செவ்வாய்க்கிழமை உஜவர் திருனல்
  • 26 ஜனவரி வியாழக்கிழமை குடியரசு தினம்
  • 02 பிப்ரவரி ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம்
  • 22 மார்ச் புதன்கிழமை தெலுங்கு வருட பிறப்பு
  • 1 ஏப்ரல் சனிக்கிழமை வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
  • 4 ஏப்ரல் செவ்வாய்க்கிழமை மகாவீரர் ஜெயந்தி
  • 7 ஏப்ரல் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
  • 14 ஏப்ரல் வெள்ளிக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு
  • 22 ஏப்ரல் சனிக்கிழமை ரம்ஜான்
  • 1 மே திங்கட்கிழமை மே தினம்
  • 29 ஜூன் வியாழக்கிழமை பக்ரீத்
  • 29 ஜூலை சனிக்கிழமை மொகரம் பண்டிகை
  • 15 ஆகஸ்ட் செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம்
  • 6 செப்டம்பர் புதன்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
  • 17 செப்டம்பர் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்தி
  • 28 செப்டம்பர் வியாழக்கிழமை மீலாதுன் நபி
  • 2 அக்டோபர் திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி
  • 23 அக்டோபர் திங்கட்கிழமை ஆயுத பூஜை
  • 24 அக்டோபர் செவ்வாய்க்கிழமை விஜயதசமி
  • 12 நவம்பர் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி
  • 25 டிசம்பர் திங்கட்கிழமை கிறிஸ்துமஸ்
Tamil Nadu Government Holidays 2023 | Government Holidays 2023

Tamil Nadu Government Holiday List 2023

2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகைகள் காரணமாக, அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த பொது விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும்.

அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப் பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப் பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட 8 நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *